Sri Mahavishnu info

Description
ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பற்றிய அரிய தகவல்கள், வழிபாட்டு முறைகள், பன்னிரு ஆழ்வார்கள், புராண கதைகள் மேலும் இந்து மதத்தின் கலாச்சார பெருமைகளை அனைவரும் தெரிந்து கொள்ள ஒரு சிறு முயற்சி இந்த சேனல்

https://srimahavishnuinfo.org

English channel @mahavishnuinfoenglish
Advertising
We recommend to visit

Dinamalar - Latest news , breaking news from India and the world.

Our official account on social networks:
https://www.facebook.com/Dinamalardaily
https://twitter.com/dinamalarweb
https://www.youtube.com/dinamalardaily

Last updated 2 weeks, 1 day ago

கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா

🔰🔰

Last updated 1 month ago

பாலியல் ஆலோசனைகள் மற்றும் குடும்பநல தகவல்கள் - செக்ஸ் மருத்துவ தகவல்கள் - தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள் - காம கவிதைகள்

🔞 டாக்டர் அந்தரங்கம்:
https://t.me/DocAntharangam

https://youtube.com/@DoctorAntharangam

Last updated 1 month ago

1 year, 1 month ago

ஸ்ரீராம ராம ராமேதீ ராமே
ராமே மனோரமே
சகஸ்ர நாம தத்துலயம்
ராம நாம வரானனே...

1 year, 1 month ago

ராம நாம மகிமை...

@mahavishnuinfo

  1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.

  2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே
    மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் .

  3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.

  4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

  5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்.' அந்த நாள் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.

  6. ' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,

  7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!

  8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும்.

இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .

  1. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .

  2. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு .

  3. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.

  4. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது )
ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

  1. பெண்களின் மாதாந்திர நாட்களிலும் 'ராம நாமா' சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ......அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.

  1. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும்.

  2. 'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
    ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.

சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு ..... அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! ..... யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய் இருந்தோமோ ! என்னவோ ........ அப்புண்ணிய பலனை ..... ராமனே அறிவான்.

வெற்றியை நல்கும் ஸ்லோகம்

1 year, 1 month ago
Sri Mahavishnu info
1 year, 2 months ago

அறிவைத் தருபவள் மகாலட்சுமி

ஆதிசங்கரர், வேதாந்த தேசிகர், வித்யாரண்யர் முதலியவர்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் எல்லோரும் மகாலட்சுமிக்கு ஸ்தோத்திரம் செய்தவர்கள். தங்களை நாடி வந்த ஏழைக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்று `கனகதாரா ஸ்தோத்திரம்’ செய்தார் ஆதிசங்கரர்.

வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி செய்தார். வித்யாரண்யருக்கு மகாலட்சுமியினுடைய தரிசனமே கிடைத்தது.

ஆனால், இவர்கள் எல்லோருமே தங்களுக்காக மகாலட்சுமியை பிரார்த்திக்கவில்லை. ஆதிசங்கரர் மகாலட்சுமியை செல்வத்தின் அதிதேவதையாக மட்டும் கருதவில்லை.

ஞானம் என்னும் நித்திய செல்வத்தை அருள்பவளாகவே கருதித் துதித்தார்.

அவர் பாடிய ஸ்லோகம் இது.`விச்வாம ரேந்த்ர பதவிப்ரமதா தட்சம்
ஆநந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி
ஈஷந்நிஷீ தது மயிக்ஷண
மீக்ஷணார்த்தம்
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:’

‘‘உன் பார்வை விளையாட்டாய்கூட எவர் மீது பட்டாலும் அவர் விண்ணுலக வாழ்வை பெற்று இந்திரனுக்கு சமமாக வாழ்வான்.

நீலோத்பல மலர் மகுடம் போன்ற உன் திருமுகத்தின் விழிகளின் கடைக்கண் பார்வை ஒருக்ஷணம் என் மீது பட்டாலும் உன் கருணைக்கு ஆளாவேன் தாயே!’’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

மகாலட்சுமிக்கு பிடித்த மலர்கள்
நிவேதனங்கள்

மகாலட்சுமிக்கு பிடித்த தாமரைப் பூ, மல்லி பூ, மரிக் கொழுந்து, பன்னீர் ரோஜா, இப்படி நமக்கு எந்த பூ கிடைத்தாலும் அதை வைத்து வழிபாடு செய்யலாம். வாசனை மிகுந்த சந்தனம், ஜவ்வாது, அத்தர், கோரோசனை இப்படியாக பல வாசனை பொருட்கள் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது.

மிக முக்கியமாக பொங்கல், பால் பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழைப்பழம், திராட்சை முதலிய கனி வகைகளைப் படைக்க வேண்டும். மிக முக்கியமாக தாமரை மலர்கள் மகாலட்சுமிக்கு பிடித்தமானது.

வில்வமும் மகாலட்சுமிக்குப் பிடித்தமானது.

பார்கவிமகாலட்சுமியை மகளாக அடைய வேண்டும் என்று சாமானிய மன்னர்கள் மட்டுமல்ல ரிஷிகளும் விரும்புகிறார்கள்.

பிருகு மகரிஷி சாட்சாத் மகாலட்சுமி தனக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும். அந்த குழந்தையை, தான் கண்ணும் கருத்துமாக வளர்த்து மகாவிஷ்ணுவுக்கு மாமனாராக இருந்து மணம் முடித்துத் தர வேண்டும் என்று தவம் செய்தார்.

அந்த தவத்தை உத்தேசித்து மகாலட்சுமி பிருகு மகரிஷியின் மகளாகத் தோன்றினாள். பிருகு புத்ரி என்பதால் குழந்தைக்கு பார்கவி என்று பெயர் சூட்டினார்.

மகாலட்சுமியை ரிஷிகள், மன்னர்கள் மட்டுமல்ல, கோடீஸ்வரர்களும் விரும்புகின்றார்கள். எவ்வளவு செல்வம் இருந்தாலும் மேலும் செல்வம் வேண்டும் என்று பிரார்த்திக்காதவர்கள் யார் இருக்கின்றார்கள்

செல்வத்தைச் சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல; அது தவறானவர்களிடம்கூட, சமயத்தில், பூர்வ ஜென்ம வினையால் சேர்ந்துவிடும் அது

மிக சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு மகாலட்சுமியின் அருள் வேண்டும்.

எது நிரந்தர, நீங்காத செல்வமோ அதைத் தர வேண்டும் என்று மகாலட்சுமியை பிரார்த்திக்க வேண்டும்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்

ராமாயணத்தில் லட்சுமணன் மரவுரி தரித்து ராமனோடு காட்டுக்குக் கிளம்பத் தயாராகின்றான்.

அவனை காட்டுக்கு போ என்று யாரும் சொல்லவில்லை.
மரவுரி தரிக்கவும் யாரும் சொல்லவில்லை.

அவன் சகல சௌக்கியங்களும் அனுபவிக்கக் கூடிய இளவரசன்.

ஆனால், ராமனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று, எல்லாவற்றையும் உதறி விட்டுக் கிளம்பினான். இப்படிக் கிளம்பியதால் அசல் செல்வந்தன் ஆனான் என்ற பொருளில்

‘‘லஷ்மனா லஷ்மி சம்பன்ன: என்று அவனை ஸ்ரீமான் என்கிற பட்டம் கொடுத்து அழைத்தார்கள்’’. அவனுக்கு நிலைத்த செல்வமான கைங்கரிய செல்வம் கிடைத்தது.
மகாலட்சுமி தேவியின் மலரடிபணிந்து
அறிவு செல்வம் ஆற்றல் பெறுவோமாக.

@mahavishnuinfo

1 year, 2 months ago

அதனால், அதன் பின்னர் ஒன்று, பத்து, நூறு,

ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி... எனக் கூவிக் கூவி அளந்து போடப்படுகிறது.

தன் நேரடிப் பார்வையில் ‘நெல் அளவை’ கண்ட நம்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் இணைந்து,அதன்பின்பு
படியளக்கும் பெருமாளாக பூந்தேரில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.

ஸ்ரீரங்கம் படி அளக்கும் உற்சவத்தை பார்ப்பவர்கள் இல்லங்களில் உணவுக்கு தட்டுப்பாடு வராது என்பது ஆண்டாண்டு காலமாக தொடரும் நம்பிக்கை.

@mahavishnuinfo

1 year, 2 months ago

ஸ்ரீ ராம பக்தி இயக்கம்:
"படியளக்கும் பெருமாள்" என்ற பெயர் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு எப்படி வந்தது,தெரியுமா?

ஸ்ரீரங்கம் தமிழில் திருவரங்கம்.
தென்னரங்கம் இவர் அந்தரங்கம்.

பல விசேஷமான வைபவங்களை கொண்டவர்.

வருடம் 365 நாளும் திருவிழா காணும் பெருமாள் அநேகமாக இவராகத்தான் இருப்பார்.

இவர் மீது கொண்ட பக்தியாலும், பிரம பாசத்தாலும் பலரும் பல விதங்களில் பல வழிகளில் இவரை ராஜா போலவே பாவித்து பணிவிடை செய்து வருகின்றனர்.

இவருக்கான தளிகை அதாவது சமையல் முறை அலாதியானது.

இவருக்கு ஹம்சை செய்யும் பிரசாதங்கள், பலகார பட்சணங்களை தயாரிக்கும் முறைகளும் வெகு பிரசித்தமானது.

பாத்திரங்களும் ஒரு முறை மாத்திரமே பயன்படுத்துவர்.

மண் பாண்டங்களே பிரதானம்.அவ்வளவு ஏன் ஊறுகாய் கூட அன்றே தயாரிக்கபடும்.

இவருக்கு அமுது ஹம்சை பண்ணப்படும் பட்டியல் நீண்டது.

கண் படும் என்பதால் இங்கு விரிவடைய எழுதிடவில்லை.

ஆனால் தளிகை தயாரிப்பு முறைகளை அன்றே கல்வெட்டுகளில் செதுக்கி வைத்து சென்றுள்ளனர்.
இஃது பலருக்கும் தெரியாது.

விடாய் பருப்பு, எரி துரும்பு இவைகள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

உங்களால் இது என்ன என்று ஊகிக்க முடிகிறதா.????

விடாய் பருப்பு என்றால் மொச்சைக்காய், எரி துரும்பு என்றால் விறகு .

பகவான் எல்லாருக்கும் படி அளக்கிறான்’ என்று வழக்கில் சொல்வார்கள்.

ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே படியளக்கிறார்.

அதாவது,வருஷத்துக்கு ஏழு தடவை!

சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவைத் திருநாள் நடைபெற்று வருகிறது.

மாதங்களின் பிரம்மோற்சவ காலங்களில் அதன்
ஏழாம் திருநாளன்று,
நெல் அளவைக் கண்டருளப்படுகிறது.

நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி - பூதேவி துணைவரக் கிளம்புகிறார் நம்பெருமாள்.

ஏன்? இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு;
செலவு எவ்வளவு மீதி இருப்பு எவ்வளவு... என்று கணக்கிட்டுப் பார்க்க.

அதற்கு எதற்கு தேவியரையும் சேர்த்தழைத்துக்
கொண்டு போக வேண்டும்?

கணவனின் சரிபங்கான மனைவிக்கு, எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும்.

தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று, நமக்கு உணர்த்துவதற்காக வருகிறார்.

தவிர, தானிய அளவையின்
போது, தானிய லெட்சுமி துணைவர வேண்டுமல்லவா?

பட்டு வேஷ்டி; அங்கவஸ்திரம் அணிந்து, ஸ்ரீதேவி - பூதேவியர் இருவரும் பட்டாடை உடுத்தி உடன் வர, பக்தர்கள் புடைசூழ, வெளிப்பிரகாரமான இராஜமகேந்திரன் திருச்சுற்றில் பவனி வருகிறார் நம்பெருமாள்.

ஆர்யபட்டாள் வாசல் வழியே வந்து, செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு,
நாலு கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.

அப்போது பாசிப் பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.

செங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிச்சாரகம் செய்பவர், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து நம்பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்கிறார்.

அவருக்கு மரியாதை செய்விக்கப்படுகிறது.

பெருமாள் அருகிருக்கும் ஸ்தானிகர் அருளிப்பாடி கார் அளப்பானை அழைக்கிறார்.

ஸ்தானிகர் குரல் கேட்டு, ‘ஆயிந்தேன்...ஆயிந்தேன்.
'(வருகிறேன்...வருகிறேன்)
எனச் சொல்லி விரைந்து சென்று பெருமாள் முன்பு மிகப் பணிவாக நிற்கிறார் அளவைக்காரர்.

அவருக்கு தீர்த்தம், சந்தனம், மஞ்சள்பொடி அளித்து, பரிவட்டம் கட்டி, சடாரி சாத்தி மரியாதை செய்யப்படுகிறது.

பெருமாள் பாதம் ஆன சடாரி சாத்தினாலே, அளவைக்காரருக்கு உத்தரவு வந்துவிட்டது என்று பொருள்.

இதோ, கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர், பித்தளை மரக்கால் கொண்டு நெல் அளக்கத் தொடங்குகிறார்.

‘திருவரங்கம்’ எனச் சொல்லி, முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார்.

அடுத்து ‘பெரிய கோயில்’ எனக் கூறி, இரண்டாவது மரக்கால் நெல்லை அளக்கிறார்.

அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது.

ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது,

‘நிரவி விட்டு அள’ என்று. ஸ்தானிகர்தான் குரல் கொடுக்கிறார்.

‘சரியாக அளந்து போடு’ என்று பெருமாளே கட்டளையிடுவதாக ஐதீகம்.

“அந்தக் காலத்திலிருந்து எல்லாமே எம்பெருமாளின் நேரடிப் பார்வையில் நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை.

தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் திருக்கொட்டாரத்திலிருந்துதான் எடுத்து அனுப்பப்படுகிறது.

அந்த வகையில்
திருக் கொட்டாரம் ஒரு பொக்கிஷம்.

அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன.

நாடு செழிக்கவும், மக்கள் ஆரோக்கியத்துக்கும் தானிய உற்பத்தியும் சேமிப்பும் மிக மிக முக்கியம்.

தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள்!” எனக் குறிப்பிடுகிறார் தேவஸ்தான அர்ச்சகர் சுந்தர்பட்டர்.

உலகம் யாவுக்கும் படியளப்பவர் பெருமாள். ஒவ்வொன்றாக எண்ணிப் போட்டால் எந்தக் காலத்தில் எண்ணி முடிவது?

1 year, 3 months ago

ராமநாமத்தின் மகிமை !!

என் உறவுப்பெண் ஒருவர்
ராம ராம என்று ராம நாமத்தை
அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பார்.
மனதில் நினைத்தாலே போதுமே.
எதற்கு எப்போதும் சொல்லி கொண்டே
இருக்கிறாய் ? என்று கேட்டேன்.
அதற்கு ஒரு குட்டி கதை சொன்னார்.
Very impressive.....
ஒரு ராஜா இருந்தார். அவரு பெரிய
சக்கரவர்த்தி! அவர்தன் மந்திரியோட காட்டுக்கு வேட்டையாடப் போனார். மந்திரிக்கு வேட்டையாடறதுலே ரொம்ப இஷ்டம் இல்லே. ஆனா ராஜாவுக்கு மந்திரியோட எப்பவும் இருக்கணும்னு ஆசை. மந்திரிகிட்டே அவருக்கு ரொம்பப் பிரியம்! அதனாலே அவரையும் கூட்டிக்கிட்டு காட்டுக்கு வேட்டையாட வந்துட்டார்.
மந்திரி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராமநாமத்தை பக்தியோட சொல்வதை வழக்கமா வெச்சுக்கிட்டு இருந்தார்.
அதுலே அவருக்கு ஒரு நிம்மதி!
காட்டுலே ரெண்டு பேரும் ரொம்ப தூரம் அலைஞ்சாங்க! வேட்டையும் சரியா நடக்கலே!....களைப்பாலே ராஜாவுக்கும் மந்திரிக்கும் உடம்பு சோர்வாப் போச்சு!
கையிலே கொண்டு
வந்த தண்ணியும் தீர்ந்து போச்சு!
ராஜாவுக்கு ரொம்ப பசி! மந்திரிக்கும்தான்! .....
என்ன செய்யறதுன்னே தெரியலே.
அப்போ ரொம்ப தூரத்திலே சின்னதா
ஒரு குடிசை தெரிஞ்சுது.
ராஜா மந்திரி கிட்டே, ""இப்போ நாம் ரெண்டு பேரும் ரொம்ப களைப்பா, பசியோட இருக்கோம்.வாங்க, ரெண்டு பேரும் தூரத்திலே இருக்கற அந்த குடிசையிலே போய் ஏதாவது சாப்பிட இருக்கான்னு கேட்டுப் பார்க்கலாம்!'' அப்படீன்னார்.
ஆனா மந்திரி ராஜா கிட்டே, ""எனக்கும் பசிதான்! ஆனா நான் வரலே.இங்கேயே
இந்த மரத்தடியிலேயே நான் ராமநாமத்தைச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.அது என்னோட பசியை ஆத்திடும்!ராம நாமத்தைச் சொல்றவங்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது.நீங்க போயிட்டு வாங்க.' அப்படீன்னார்.
ராஜாவுக்கு மந்திரி மேலே கோபமா வந்தது. இருந்தாலும் முதல்லே பசிக்கு ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம்னு நெனச்சுக்கிட்டு தூரத்துலே தெரிஞ்ச அந்த குடிசைக்கு நடந்து போனாரு.
அது ரொம்ப ஏழ்மையான வீடு. அங்கே இருந்த ஒரு பாட்டி கிழிசல் புடவையைக் கட்டியிருந்தாள்! ஆனா நல்ல காலம்! அந்த பாட்டி ஒரு பானையிலே நிறையச் சோறு வெச்சிருந்தாள்.
ராஜாவுக்கு ஒரு தட்டிலே சோறும், குழம்பும், பொறியலும் கொடுத்தாள்! ராஜாவுக்கு அது தேவாமிர்தமா இருந்தது! சாப்பிட்டுட்டு ராஜா தண்ணியும் குடிச்சாரு! ராஜாவுக்குப் பசி அடங்கிடுச்சு!
அவரு பாட்டிகிட்டே, "பாட்டி என்னோட கூட ஒருத்தர் வந்திருக்காரு.அவரும் பசியோடதான் இருக்காரு.ஒரு தட்டிலே அவருக்கும் கொஞ்சம் சோறு கிடைக்குமா?'' அப்படீன்னு கேட்டார்.
அதுக்கென்ன, தாராளமா எடுத்துக்கிட்டுப் போ!.நான் வேறே சோறு வடிச்சுக்கறேன்!'' அப்படீன்னு சொல்லிட்டு, பாட்டி ஒரு தட்டிலே, சோறு, குழம்பு, பொறியல் எல்லாம் போட்டுத் தந்தாங்க!''
ராஜா அதை எடுத்துக்கிட்டு, ஓடோடி வந்து, பாட்டி வீட்டிலே நடந்ததை எல்லாம் சொல்லி, மந்திரிகிட்டே உணவுத் தட்டைக் கொடுத்தாரு. மந்திரியும் அதைச் சாப்பிட ஆரம்பிச்சார்.
ராஜா மந்திரியைப் பார்த்து, "நீங்க சொல்ற ராம நாமமா உங்களுக்கு சோறு கொண்டு வந்து கொடுத்தது? என்னோட யோசனையால்தானே உங்களுக்கு இப்போ சோறு கிடைத்தது!'' அப்படீன்னார்.
மந்திரி ராஜாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, "ராஜா, நீங்க சக்கரவர்த்தி!
ஆனா நீங்க ஒரு சாதாரண ஏழைப் பாட்டிகிட்டே கையேந்தி சாப்பாட்டுக்கு நின்னீங்க.அதனாலே உங்களுக்கு சாப்பாடு கிடைச்சுது!.ஆனா எனக்கு என்னோட பிரபு ஸ்ரீராமன், சக்கரவர்த்தியான உங்க கையாலே, நான் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து கொடுக்கும்படியாச் செஞ்சுட்டார்!
இதுதான் ராமநாமத்தின் மகிமை!.'
அப்படீன்னார்.
சக்கரவர்த்தியும் தன்னோட
தப்பை உணர்ந்து தலை குனிந்தார்..!

ஜெய் ஸ்ரீராம் !!

@mahavishnuinfo

1 year, 3 months ago

உன்னை தவறாகப் புரிந்து
கொண்டவரைப் பற்றி
தவறாக எண்ணாதே!

மனிதருக்குள் மனோபாவம்
வேறு வேறானது
என்பதை அறிந்து
அமைதியாக இரு...!!

மனம்
மகத்துவம் செய்யும்
மந்திராலயம்

தினம்
அதனை
நேசம்கொண்டு
பூஜை கொள்

நீ... நினைப்பதே
நடக்கும்..!

@mahavishnuinfo

1 year, 3 months ago

இன்றையசிந்தனை

?????????

எவரையும் திருத்த
நினைக்காதீர்கள்..
தோற்று விடுவீர்கள்!

காலம் அவர்களை
திருத்தி விடும்..

இல்லையேல்,
காலம் அவர்களுக்கு
உணர்த்தி விடும்..

அதுவரை அமைதியாக இருப்போம்....

?????????

இனிய நாளாகட்டும்

1 year, 6 months ago

Cambodia Angkor Wat - அங்கோர் வாட் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

??
https://www.srimahavishnuinfo.org/2023/06/cambodia-angkor-wat.html

Sri Mahavishnu info

Cambodia Angkor Wat - அங்கோர் வாட் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

Explore one of the world's most iconic ancient temples with a visit to Cambodia's Angkor Wat. Discover its secrets and explore its beauty!

Cambodia Angkor Wat - அங்கோர் வாட் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
We recommend to visit

Dinamalar - Latest news , breaking news from India and the world.

Our official account on social networks:
https://www.facebook.com/Dinamalardaily
https://twitter.com/dinamalarweb
https://www.youtube.com/dinamalardaily

Last updated 2 weeks, 1 day ago

கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா

🔰🔰

Last updated 1 month ago

பாலியல் ஆலோசனைகள் மற்றும் குடும்பநல தகவல்கள் - செக்ஸ் மருத்துவ தகவல்கள் - தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள் - காம கவிதைகள்

🔞 டாக்டர் அந்தரங்கம்:
https://t.me/DocAntharangam

https://youtube.com/@DoctorAntharangam

Last updated 1 month ago