கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா
🔰🔰
Last updated 2 Monate, 2 Wochen her
பாலியல் ஆலோசனைகள் மற்றும் குடும்பநல தகவல்கள் - செக்ஸ் மருத்துவ தகவல்கள் - தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள் - காம கவிதைகள்
🔞 டாக்டர் அந்தரங்கம்:
https://t.me/DocAntharangam
https://youtube.com/@DoctorAntharangam
Last updated 5 Monate, 1 Woche her
@tamil_info
@tamil_mp3_songs
@hollywood_super_scenes
Last updated 5 Jahre her
கீத்ரூன் கிராமம் (Giethoorn village)
நெதர்லாந்தின் ஓவர்ஜெசியல் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமம் தான் இந்த கீத்ரூன் கிராமம்.
இங்கு, பெரும்பாலும் படகுப் போக்குவரத்து, நடைபாதை, சைக்கிள் பாதை என்றே அமைந்துள்ளன.
இங்கு கார்களை இயக்கும் அளவுக்கு பரந்த சாலைகள் இல்லை. பெரும்பாலும் நீர்வழிப்பாதைதான்..
இந்நகரை "நெதர்லாந்தின் வெனிஸ்" என்பர்.
வெனிஸ் என்பது இத்தாலியில் உள்ள படகுப் போக்குவரத்தாலேயே அமைந்த நகரம்.
அதேபோல்தான் இங்கும், பெரும்பாலும் படகுப் போக்குவரத்து மட்டுமே!
இந்த கால்வாய்களின் நீளம் 4 மைல் தூரம்.
இந்த கிராமத்துக்கு செல்ல விரும்புபவர்கள் இதன் அருகிலுள்ள கிராமங்களிலேயே தமது காரை நிறுத்திவிட்டு அங்கிருந்தே படகுப் போக்குவரத்தின் வழியேதான் செல்ல முடியும்.
3000 மக்கள் மட்டுமே இங்கு வாழ்வதாக கூறப்படுகிறது.
இயற்கை அழகை ரசிக்க நெதர்லாந்திலேயே இதுதான் சிறந்த இடம் என்பர்.
மேலும் பனிக்காலத்தில் இந்த கால்வாய் முற்றிலும் பனிக்கட்டியாகவே மாறிவிடுமாம்..
அப்புறம் எப்படி போக்குவரத்து?
நேரடியாக ஸ்கேட்டிங் தான்..
மிதக்கும் நகரம் என்றால் வெனிஸ்..
அந்த வகையில் இதுவும் ஒரு "குட்டி" வெனிஸ்தான்.
ஆசியாவிலேயே பெரிய பழமையான யானை சிலை!கங்கைகொண்டசோழபுரம் அருகே 4 கி.மீ. தொலைவில் வடக்கு எல்லையில் இளையபெருமாள் நல்லூர் என்ற சிற்றூரில் இந்த யானை சிலை உள்ளது. சலுப்பை அழகர் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.
இச்சிலை சோழர் காலத்திய சிற்பம் என்றாலும், 16 - 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர் காலத்தில் அப்போதைய வடிவமைப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது 60 அடி உயரம், 33 அடி நீளம், 12 அடி அகலம் உயரம் உடைய ஆசியாவிலேயே பெரிய யானைச் சிலையாகும்.
இச்சிலை வெல்லம், கடுக்காய், சுண்ணாம்பு ஆகிய கலவையினால் சுட்ட செங்கற்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. யானை சிலையின் கழுத்து, உடலின் இரு புறங்களிலும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சலுப்பை அழகர் கோயிலின் அருகில் பலா தோப்பில் பலா பழத்தைத் திருடிய திருடனைப் பிடிக்க கோயிலில் இருந்த நாய் ஒன்று துரத்தியுள்ளது. அந்நேரத்தில் அந்தத் திருடனை யானை ஒன்று மடக்கிப் பிடித்துள்ளது. ஆகையால், அதைக் குறிக்கும் வகையில் யானையின் துதிக்கையில் பலா பழத்துடன் மனிதன் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது என்று இச்சிலைக் குறித்து இப்பகுதி மக்கள் கதையாக சொல்லி வருகின்றனர்.
சென்ற 11.12.2020 அன்று இச்சிலைப் பாதுகாப்பட்ட பழமையான சின்னம் எனத் தமிழகத் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டது.
உயர்ந்து நிற்கும் இந்த யானை சிலை அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது.
©புதுச்சேரி வரலாற்றுப் பேரவை.
கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா
🔰🔰
Last updated 2 Monate, 2 Wochen her
பாலியல் ஆலோசனைகள் மற்றும் குடும்பநல தகவல்கள் - செக்ஸ் மருத்துவ தகவல்கள் - தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள் - காம கவிதைகள்
🔞 டாக்டர் அந்தரங்கம்:
https://t.me/DocAntharangam
https://youtube.com/@DoctorAntharangam
Last updated 5 Monate, 1 Woche her
@tamil_info
@tamil_mp3_songs
@hollywood_super_scenes
Last updated 5 Jahre her