Dinamalar - Latest news , breaking news from India and the world.
Our official account on social networks:
https://www.facebook.com/Dinamalardaily
https://twitter.com/dinamalarweb
https://www.youtube.com/dinamalardaily
Last updated 2 weeks, 1 day ago
கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா
🔰🔰
Last updated 1 month ago
பாலியல் ஆலோசனைகள் மற்றும் குடும்பநல தகவல்கள் - செக்ஸ் மருத்துவ தகவல்கள் - தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள் - காம கவிதைகள்
🔞 டாக்டர் அந்தரங்கம்:
https://t.me/DocAntharangam
https://youtube.com/@DoctorAntharangam
Last updated 1 month ago
உடலுறவில் ஒவ்வொரு ஆணும் பல முறை உச்ச இன்பத்தை (Multiple Orgasmic) அடைவது எப்படி? - Dr.Antharangam
ஒவ்வோரு ஆணும் புணர்ச்சியில் பல் முறை உச்ச இன்பத்தை தக்கவைத்து கொள்வது மிகவும் அவசியம்.
ஒரு ஆண் பல் முறை உச்ச இன்பத்தை தக்கவைத்து கொள்ளும் ஆண் பாலுறவில் மட்டும் இல்லாமல் அவனுடைய வாழ்க்கையும் தன்னமிக்கை மிக்கதாக இருக்கும்.
ஆனால் ஒரு ஆண் 13 வயதிலிருந்து சுயமாகவே பாலுறவு சம்மந்தமான அறிவு அவனாகவே தேடி வளர்த்து கொள்ளும் நிலை இங்கு உள்ளது.
ஆனால் பெரும்பாலும் ஆண்கள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லாததால் பாலுறவில் சிறந்து விளங்க இயலாமல் போகிறது.
முதலில் பொதுவாக ஆணிற்கு தன் இன்ப நீர் வெளியே வரும்போதுதான் உச்ச இன்பம் என்று உணர்கிறோம், ஆனால் ஐந்து வினாடிக்குள் ஒரு ஆணுக்கு நடந்து முடிந்து விடுகிறது.
ஆனால் ஒரு பெண்ணிற்கு உச்ச இன்பம் மட்டுமே 10 நிமிடிங்கள் தொடர் இன்பம் பெண்களால் அனுபவிக்க முடியும்.
ஆணிற்கு ஐந்து வினாடி பெண்ணிற்கு பத்து நிமிடங்கள் இதில் ஆண் தன் இன்ப உறுப்பை வைத்து தொடர்ந்து இடைவெளி இல்லாமல் இயக்க வேண்டும் அதனால் ஆணின் இன்ப உறுப்பு விறைப்பு குறையாமல்,
அதை நாம் விரிவு படுத்த வேண்டும், அதாவது இன்ப நீர் வருவதை தடுத்து நிறுத்தி நிறுத்தி இயக்க வேண்டும்.
எவ்வாறு தடுத்து நிறுத்துவது, ஒரு ஆணின் உச்சத்தில் இன்ப நீர் வெளி வரும்போது அவனுடைய பூஸ்டங்கள் உள் இழுத்து கொள்ளும், அவனுடைய விதை பையும், மல துவாரமும் உள் இழுத்து கொள்ளும்.
இந்த இனப்பெருக்க உறுப்புக்கள் உள் இழுப்பாததால் தன் இன்ப நீர் விரைவான வேகத்தில் பெண்ணின் புணர் புழையில் ஆழமாக சென்று கருப்பையை அடையமுடியும்.
ஆண் எப்போதும் பாலுறவு கொள்ளும்போது ஒரு முட்கள் நிறைந்த பாதையில் எவ்வாறு நிதானமாக பார்த்து பார்த்து கவனமாக செல்வமோ அது போல் ஆண் பெண்ணை தீண்டும் தன் இச்சையின் வேகத்தை தன் கட்டுக்குள் வைத்து கொள்ளவேண்டும்.
அவசர பட்டுவிட்டால் அனைத்தும் வெளியேறிவிடும் பின்பு எந்த வித உணர்வும் ஆணுக்கு தோன்றாது ஆனால் இளம் வயது ஆண்கள் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும்.
காதலி தன் அருகில் இருந்தாலோ அல்லது தன் இன்ப உறுப்பை தொட நினைத்தாலோ இன்ப நீர் வெளியேறிவிடும் இது இயற்கையே.
தீண்டலின் அலாதி ஆர்வத்தில் அவ்வாறு நிகழும் ஆனால் அதே நிலை தொடர்ந்து நிகழாமல் தன்னை ஒரு ஆண் வலுப்படுத்தி கொள்ளவேண்டும் அப்போதுதான் பெண் முழுமையான இன்பத்தை பெறமுடியும்.
திருமணமானவர்கள் முத்தமிடுவதை நிறுத்தினால் அவர்களின் உறவில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா? - Dr.Antharangam
காதல் மற்றும் திருமண உறவில் இருப்பவர்கள் அடிக்கடி முத்தமிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. முத்தம் என்பது தம்பதிகள் தங்கள் அன்பு மற்றும் நெருக்கத்தை வெளிப்படுத்தும் என்று ரொமான்டிக்கான செய்கையாக பார்க்கப்படுகிறது. தம்பதிகளிடையே நெருக்கம் மற்றும் காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க இது மிகவும் அவசியமானதாகும். அதுமட்டுமின்றி முத்தமிடுவதில் சில ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது.
காதலர்களும், திருமணமான தம்பதிகளும் முத்தமிடுவதை நிறுத்தம் போது அது அவர்களின் உறவில் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் இது இது உறவில் உள்ள அடிப்படை சிக்கல்களைக் குறிக்கலாம். தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்தும்போது அது அவர்களின் உறவில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உணர்வுரீதியான விலகல்:
தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்தும் போது ஏற்படும் முதல் மற்றும் மோசமான விளைவுகளில் ஒன்று அவர்களுக்கு இடையே அதிகரிக்கும் உணர்வுரீதியான இடைவெளியாகும். முத்தம் என்பது உடல்ரீதியான செயல்பாடு மட்டுமல்ல, அது தங்கள் துணை மீதுள்ள அன்பு மற்றும் உணர்வுபூர்வமான தொடர்பின் வெளிப்பாடாகும்.
தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்துவது அவர்களுக்கிடையேயான உணர்வுபூர்வமான நெருக்கம் குறைகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். இதன் விளைவாக அவர்களுக்குள் இடைவெளி அதிகரிக்கும், இது தவறான புரிதல்கள், தொடர்பு குறைதல் மற்றும் தனிமையின் உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
நெருக்கம் குறையும்:
முத்தமிடுவது என்பது காதல் உறவில் உடல் நெருக்கத்திற்கான தொடக்கப்புள்ளியாகும். இது தம்பதிகளின் ஆர்வத்தையும் விருப்பத்தையும் தூண்டுகிறது, மேலும் நெருக்கமான தருணங்களுக்கு ஆரம்பமாக இருக்கிறது. திருமணமான தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்தும்போது, அது பெரும்பாலும் ஒட்டுமொத்த உடல் நெருக்கத்தில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்துகிறது.
முத்தங்கள் இல்லாததால் அரவணைப்பு, கட்டிப்பிடித்தல் மற்றும் இறுதியில் பாலியல் செயல்பாடு போன்றவை முற்றிலும் குறையும். இந்த பாலியல் செயல்பாட்டின் குறைவு உறவுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். உடல் நெருக்கம் உடல் ஆசைகளை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் உறவில் பாதுகாப்பு மற்றும் திருப்தி உணர்வை வளர்க்கிறது. தம்பதிகள் முத்தமிடுவதைத் தவிர்க்கும்போது, அது வேறொருவரிடம் அதை நாட வைக்கும்.
கம்யூனிகேஷன் குறையும்:
முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, உறவில் தொடர்பு கொள்ளும் அழகிய வழிமுறையும் கூட. இது ஒருவரின் உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் நோக்கங்களை வெளிப்படுத்துகிறது. தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்தும்போது, ஒருவரையொருவர் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகள் குறையும்.
உறவில் வாய்மொழி தொடர்பு முக்கியமானது, அதேபோல முத்தமிடுவது போன்ற செயல்களும் முக்கியமானவை. உடல் நெருக்கம் இல்லாதது தம்பதிகளிடையே பயனுள்ள தகவல்தொடர்புக்கு தடையாக இருக்கும். இதனால் தவறான புரிதல்கள் எளிதில் ஏற்படலாம்.
சுயமரியாதை குறைகிறது:
முத்தம் என்பது தங்கள் வாழ்க்கைத்துணையிடம் அன்பை வெளிப்படுத்தும் வழி மட்டுமல்ல, இது அவர்களின் சுயமரியாதைக்கான ஆதாரமாகவும் இருக்கிறது. தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்தும்போது, அது அவர்களின் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை பாதிக்கும். முத்தம் உங்கள் துணைக்கு நேசிக்கப்படும் மற்றும் கவர்ச்சிகரமான உணர்வை வழங்குகிறது, இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.
வழக்கமான முத்தங்கள் இல்லாத போது ஒருவர் தங்கள் தோற்றம் பற்றியும், கவர்ச்சி பற்றியும் சந்தேகம் கொள்ளலாம். இது சந்தேகம் மற்றும் பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.
துரோகத்தின் ஆபத்து அதிகரிக்கும்:
திருமணமான தம்பதிகள் முத்தமிடுவதை நிறுத்தினால், அவர்கள் தங்கள் துணை துரோகம் செய்வதற்கான சூழலை உருவாக்குகிறார்கள். அனைத்து துரோகங்களும் உடல்ரீதியான நெருக்கம் இல்லாததால் ஏற்படுவதில்லை அது ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். உடல்ரீதியான நெருக்கம் இல்லாதபோது தங்கள் திருமணம் மகிழ்ச்சியானதாக இல்லை மற்றும் தாங்கள் தோற்றுவிட்டது போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். இதனால் அவர்கள் அந்த உடல்ரீதியான நெருக்கத்தை வேறொருவரிடம் தேட தொடங்கலாம்.
நீங்கள் யாரிடமும் சொல்லக் கூடாத சில விஷயங்கள்! - Dr.Antharangam
ஒரு உறவில், திருமணமானாலும் அல்லது இன்னும் காதலித்துக் கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் மற்றவரிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள் உள்ளன.
உங்கள் உறவில் வஞ்சகர் யார் என்று உங்களுக்குத் தெரியாது. உங்களுக்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டிய முக்கிய சில ரகசியங்கள் உள்ளன.
உங்கள் துணை எவ்வளவு பலவீனமானவர் என்று யாரிடமும் சொல்லாதீர்கள். யாராவது உங்களுக்கு அல்லது அவர்களுக்கு எதிராக இதைப் பயன்படுத்தலாம்.
உங்கள் துணையுடன் நீங்கள் எவ்வளவு சண்டையிடுகிறீர்கள் என்பதை பிறரிடம் சொல்லாதீர்கள். உங்களுக்குள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நீங்கள் நல்ல ஜோடியாய் தெரிய வேண்டும்.
உங்கள் கணவரிடமிருந்து செலவுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று ஒரு சிறந்த நண்பரிடம் கூட சொல்லாதீர்கள். அவர்கள் கேட்டால் அவர் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக கொடுக்கிறார் என்று சொல்லுங்கள்.
உங்கள் மனைவி படுக்கையில் எவ்வளவு ஒத்துழைப்பவர் என்று நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லாதீர்கள். அது உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே உள்ள ரகசியம்.
உங்கள் அம்மாவிடம் அவர் அல்லது அவள் திருமண வாழ்க்கையில் நடந்து கொள்ளும் விதத்தை ஒருபோதும் சொல்லாதீர்கள். பொறாமை கொண்ட மாமியாராக இருந்தால் அதன் விளைவு உங்களுக்கு கடுமையாக இருக்கும்.
பெண்களே, உங்களுடைய ஒரு தோழிக்கு உங்கள் கணவன் மீது ஒரு கண் இருக்கலாம். அதனால் அவர் உங்களை எப்படி பார்த்துக்கொள்கிறார் என்றோ, எவ்வளவு நல்லவர் என்றோ, படுக்கையில் வல்லவர் என்றோ உங்களுக்குள் இருக்கும் அன்யோன்யம் பற்றியோ வாய் திறக்காதீர்கள்.
உங்கள் கணவருடன் நீங்கள் எத்தனை முறை சண்டையிடுகிறீர்கள் என்பதை அறிய உங்கள் பெற்றோர், உடன் பிறந்தவர் கூட தகுதியற்றவர். அவர்களில் பெரும்பாலோர் அதை உபதேசமாகப் பயன்படுத்துவார்கள். அது உங்கள் இணையருக்கு பிடிக்காமல் போகலாம்.
குழந்தைகளிடம் அவர்களின் அப்பாவோ அம்மாவோ கெட்டவர் என்று சொல்லாதீர்கள். அது அவர்களுக்குள் வெறுப்பை வளர்க்கலாம். இதை பெரும்பாலான குடும்பங்களில் நாம் பார்க்கின்றோம்.
உங்கள் துணையின் கடந்த கால தவறுகளை யாரிடமும் சொல்லாதீர்கள். அது உங்கள் திருமணத்திற்கு மிக மிக ஆபத்தானது.
எந்த ஒரு விஷயத்தையும் குணப்படுத்துவதை விட தடுப்பு சிறந்தது.
உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ள புரிதல் மிக மிக அவசியம்!
அடுத்தவர்களின் சூழல்களைப் புரிந்து நடந்துக் கொள்ளுதல் மிகச் சிறந்த தலைமைக் குணம். இதற்கு விசாலமான பார்வை தேவை. கொஞ்சம் நிதானம் அவசியம்.
'புரிதல்' குறைபாடு உடையவர்களை எப்படி புரிந்து கொள்வது?
எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்பவர்கள். அடுத்தவர்களின் சிரமங்களை யோசிக்காதவர்கள் தன் நலனை மட்டுமே குறிவைத்து சிந்திக்கும் சுயநலவாதிகள். அவசரப்பட்டு நிதானத்தை இழப்பவர்கள். அவசரகதியில் முடிவெடுப்பவர்கள். அடுத்தவர்களின் சூழல்களை, மனோ பாவங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள்.
எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர்கள் போன்ற பலதரப்பட்ட மனிதர்களைச் சொல்லலாம்.
கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களைப் போன்று நம்மில் பலருக்கு வாழ்க்கையை, சமூகத்தைப் பற்றிய 'புரிதலில்' கோளாறு இருக்கிறது. சுற்றியிருப்பவர்களைப் புரிந்து கொள்ளவில்லை யென்றால் இழப்பு நமக்குத்தான். உறவுகளைத் தக்கவைத்துக் கொள் வதற்கும், புதிய உறவுக்கான தேடுதலுக்கும் 'புரிதல்' அவசியமாகிறது.
புரிதலின் 'முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் அடுத்தவர்களின் பார்வையைப், பேச்சினை உடல் அசைவினை வைத்தே அவர் என்ன நினைக்கிறார்? என்பதை முன் கூட்டியே யோசிப்பார்கள்.
சிலரின் கண்பார்வை ஆயிரம் அர்த்தங்களைப் புரியவைக்கும். மனிதர்களின் உடல் அசைவுகள் ஒவ்வொன்றும் பல அர்த்தங்களைக் கொண்டவைகள்.
புரிதல், நமக்குள் ஏற்படும் ஒருவகையான 'உள்ளுணர்வு', அடுத்தவர் களைப் பற்றிய ‘கணிப்புத் திறன்' மற்றும் 'மதிப்பீடு' ஒரு மனிதனைப் பார்த்தவுடன் ஓரளவிற்குத் தீர்மானிப்பார்கள் 'புரிதல்' திறன் கொண்டவர்கள். ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு என்று பல பயிற்சிகள் இருக்கின்றன.
மனைவிக்கு கடும் தலைவலி, சப்தத்தை அவரால் தாங்க முடியாது. ஆனால் வீட்டிலிருக்கும் கணவனோ தொலைக்காட்சிப் பெட்டியை அதிக ஒலியில் அலற வைத்துக் கொண்டிருக்கிறார். மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத கணவன், என்றாவது ஒருநாள் இதன் வெளிப்பாடு இருக்கும். கணவனுக்குப் புரிதல் அவசியம். இல்லையென்றால் சங்கடம்தான்.
காலங்கள் ஆனாலும் முதலில் 'புரிதலைப்' புரிந்து கொள்ளுங்கள். அதில்தான் வாழ்வின் முழுமையிருக்கிறது. இந்த உணர்வுகளோடு இன்று ஒருநாள் செயல்படுங்கள். உங்களின் எதிர்பார்ப்பில் நியாயமிருந்தாலும் கோபம்வராது. அடுத்தவர் நிலையிலிருந்து எதையும் யோசிக்கத் தொடங்கிவிடுவீர். முடிந்த அளவிற்கு உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். அடுத்தவர்கள் உதவ வில்லையென்றாலும் அதைப் புரிந்து நடந்து கொள்வதும் வாழ்க்கைக்கு அடக்கம்தானே.
எலும்பை வலுவாக்குகிறது:
வயதான பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் உள்ளிட்ட ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. இதனால் எலும்பில் கால்சியம் உள்ளிட்ட கனிமங்களில் குறைபாடு ஏற்படுகிறது. எலும்பு பலவீனமடைகிறது. உடலுறவு கொள்ளும்போது ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால், இந்தக் குறைபாடு தடுக்கப்பட்டு, எலும்புகள் வலுவாகின்றன.
வலி நிவாரணியாகச் செயல்படுகிறது:
அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் பிரச்னை உடல் வலி. சிகிச்சைக்காக வரும் பல பெண்கள் கூறும் பரவலான பிரச்னை இது. இவர்களுக்கு பெரும்பாலும் உடலுறவில் சிக்கல் இருப்பது தெரியவருகிறது. உடலுறவின்போது Neurotransmitter எனப்படும் நரம்பியக்கடத்திகள் வெளியாவதால் தசைகள் தளர்வாகி உடல் வலிகள் குறைகின்றன. அந்த வகையில் உடலுறவு ஒரு வலிநிவாரணியாகவும் இருக்கிறது.
உடலுறவால் ஏற்படும் நன்மைகள் என்ன? ஆண்கள், பெண்கள் உடல்நலம் பெற பாலுறவு எப்படி உதவுகிறது? - Dr.Antharangam
உடலுறவால் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் தாக்கம் என்ன, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்யேகமாகக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, தூக்கம், நோய்கள், வயதாவது உள்ளிட்டவற்றுடன் உடலுறவுக்கு இருக்கும் தொடர்பு என்ன என்பது பற்றி பார்ப்போம்.
மன அழுத்தம் குறைகிறது:
தற்காலத்தில் பரவலாக இருக்கும் மன அழுத்தத்தை உடலுறவு குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதிகமாக உடலுறவு கொள்ளும் தம்பதிகள் மத்தியில் மன அழுத்தம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன.
எடுத்துக்காட்டாக அலுவலகத்தில் ஏதேனும் உரை நிகழ்த்த வேண்டிய நாளில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அந்த நாள் காலையில் உடலுறவு கொண்டவர்களுக்கு பதற்றம் குறைந்து, நல்ல முறையில் அவர்களால் உரை நிகழ்த்த முடிந்தது என்பதை அமெரிக்க உளவியல் சங்கம் (American Psychological Association) ஓர் ஆய்வின் மூலம் உறுதி செய்திருக்கிறது. நாள்தோறும் தாம்பத்ய உறவுகொள்ளும் தம்பதிகளிடையே மனக்கசப்பு, சண்டைகள் குறைந்திருக்கின்றன. நெருக்கம் அதிகரித்திருக்கிறது.
வாழ்நாளை அதிகரிக்கிறது:
நிறைவான உடலுறவு கொள்ளும் தம்பதிகளுக்கு வாழ்நாள் அதிகரிக்கிறது. சுமார் 8 ஆண்டுகள் வரை ஆயுள்காலம் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முதலாவது காரணம் இதயம். உடலுறவால் இதயப் பிரச்னைகள் குறைவாகின்றன. சிறப்பான தாம்பத்ய உறவு இருக்கும் தம்பதிகளுக்கு ரத்த அழுத்தம் சீராகிறது. சில ஹார்மோன்கள் சுரக்கும்போது இதயத்துடிப்பு அதிகமாவதால், இதயத்தின் செயல்பாடு சிறப்பாகிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதுவே வாழ்நாள் அதிகரிக்க முதலாவது காரணம்.
இளமை நீடிக்கிறது:
உடலுறவின்போது சுரக்கும் ஹார்மோன்களால் ரத்த ஓட்டம் அதிகரித்து செல்களைப் புத்துணர்வடையச் செய்கிறது. இதனால் உடலில் வயதான மாற்றங்கள் ஏற்படுவது தள்ளிப்போகின்றன. இளமை நீடித்திருக்கிறது.
உடலுறவை ஓர் உடற்பயிற்சியாகவும் பார்க்கலாம். சுமார் 20 நிமிடம் வரை உறவுகொள்ளும்போது சுமார் 300 கலோரி வரை நமது சக்தி எரிக்கப்படுகிறது. இதுவும் உடலுக்கு நன்மையைத் தருகிறது.
தூக்கமின்மைக்குத் தீர்வு:
மாதவிலக்கு நிற்கும் நிலையில் இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளால் தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான பெண்கள் தூக்கமின்மை பிரச்னைக்காக சிகிச்சைக்காக வரும்போது, அவர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே அவர்களுடைய பாலியல் உறவு எப்படி இருக்கிறது என்பதைப்பற்றித்தான். பாலுறவில் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் முதல் பிரச்னை தூக்கமின்மை.
உடலுறவில் ஈடுபடும்போது சுரக்கும் ஆக்சிடோசின் (Oxytocin) என்ற ஹார்மோன் மனதை தளர்வாக்கி நல்ல தூக்கத்தைத் தருகிறது. இந்த வகையில், இயற்கையாக வரும் தூக்கத்தைக் காட்டிலும், உடலுறவுக்குப் பிறகு வரும் தூக்கமானது கூடுதல் உடல் ஆரோக்கியத்துக்கு காரணமாகிறது. அதனால் உடலுறவுப் பிரச்னையை சரிசெய்யும்போது தூக்கமின்மை தானாகவே சரியாகிவிடுகிறது. வாழ்க்கைத் தரமும் அதிகரிக்கிறது.
சிறுநீர்ப் பை பாதிப்பைத் தடுக்கிறது:
ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பரவலாக வரும் பாதிப்பு நீர்ப்பை இறக்கம் மற்றும் சிறுநீரை அடக்க முடியாமல் போவது. உடலுறவு கொள்ளும்போது சுரக்கும் கூடுதலான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மற்றும் பெண்ணுறுப்பில் ஏற்படும் உயவுத் தன்மை போன்றவை சிறுநீர்ப்பையில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கின்றன. அதனால் போதுமான உடலுறவு கொள்ளும் பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் ஏற்படும் பாதிப்பு குறைகிறது.
விதைப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது:
ஆண்களுக்கு பிரத்யேகமாக எடுத்துக் கொண்டால், விதைப்பை புற்றுநோய் (Prostate Cancer) வருவது 30 சதவிகிதம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது:
உடலுறவு மூலம் வாழ்நாள் 8 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் என்று பார்த்தோம். இதற்கு முக்கியமான ஒரு காரணம் நோய் எதிர்ப்புசக்தி. உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடலுறவு கொள்வோருக்கு ஐஜிஏ இம்யூனோகுளோபுலின் என்ற நோய் எதிர்ப்பு அணுக்கள் அதிகமாகின்றன. இவைதான் நோய் எதிப்பில் முதல் வரிசையில் இருப்பவை. காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றை இவை தடுக்கின்றன. அதனால் நோயில் இருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது.
உடலுறவின்போது DHA என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது வயதான மாற்றங்களைத் தடுத்து இளமையாக இருக்க உதவுகிறது.
படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அதனால் உண்டாகும் 6 தீய விளைவுகள்! - Dr.Antharangam
திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு பிறகு பல வீடுகளில் கணவன் மனைவி சேர்ந்து உறங்குவது கிடையாது. ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே குழந்தைகளுடன் உறங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
1. நெருக்கம் குறைகிறது:
கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் மனசு விட்டு பேச அல்லது காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கையறை நேரம்தான். இந்த நேரத்தை உறவை மேலும் வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் நண்பர்களே. இங்கு இருவேறு துருவங்கள் போல் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து இருப்பது கணவன் மனைவி உறவுக்கு அவ்வளவாக நல்லதல்ல என பாலியல் மற்றும் மனத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
2. எளிதில் சலித்துப் போய்விடும்:
படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் சலித்துவிடும். உங்கள் மனைவியோ, அல்லது கணவனோ ஆசையாக உங்களை தொடும்போது கூட உங்களுக்கு பெரிதாக எந்தவொரு உணர்ச்சியும் ஏற்படாது.
3. உடலுறவில் நாட்டமின்மை:
நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாகவே கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட அவ்வளவு பெரிதாக நாட்டமில்லாமல் போய்விடும்.
4. வேறு ஒருவர் மீது காதல்/ஆசை:
உங்களின் நெருக்கம் குறைவதால், நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறொருவர் மீது காதல் வயப்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மனைவியுடன் அல்லது கணவனுடன் தனிமையில் சேர்ந்து அமர்ந்து கரம் பிடித்து பேசுவதை கூட நீங்கள் விரும்பமாட்டீர்கள்.
5. சண்டைகள் & சந்தேகங்கள்:
ஒரு குடும்பத்தில் சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால் சந்தோஷம் பின் வாசல் வழியாக ஓடிவிடுமாம். எந்த சூழ்நிலையிலும் சந்தேகம் என்பது புருசன் பொண்டாட்டி வாழ்க்கையில் கூடவே கூடாது.
ஒருவருக்கொருவர் விளையாடுவது, மற்றும் சிறுசிறு காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும்போதுதான் அடிக்கடி சண்டைகள் / ஏச்சுப் பேச்சுகள் கணவன் மனைவிக்குள் வரும்.
6. இந்நிலை இப்படியே நீடித்தால் இறுதியாக வெறுப்புதான் கிட்டும்:
அதாவது உங்களது கவனம் வேறொரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், வேறொருவரை நேசிக்க நீங்கள் ஆரம்பித்துவிட்டால் உங்களது துணையை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
ஆகவே நண்பர்களே, உங்களை நம்பி கரம் பிடித்தவரை காதலியுங்கள், துணையை அணைத்து துயரம் தவிர்த்திடுங்கள்.
Dinamalar - Latest news , breaking news from India and the world.
Our official account on social networks:
https://www.facebook.com/Dinamalardaily
https://twitter.com/dinamalarweb
https://www.youtube.com/dinamalardaily
Last updated 2 weeks, 1 day ago
கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா
🔰🔰
Last updated 1 month ago
பாலியல் ஆலோசனைகள் மற்றும் குடும்பநல தகவல்கள் - செக்ஸ் மருத்துவ தகவல்கள் - தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள் - காம கவிதைகள்
🔞 டாக்டர் அந்தரங்கம்:
https://t.me/DocAntharangam
https://youtube.com/@DoctorAntharangam
Last updated 1 month ago