⭕️ Main Channel : @TamilLinksOfficial ⭕️
Last updated 7 months ago
டெலிகிராம் சார்ந்த தகவல்களை அனைவருக்கும் தமிழில் வழங்குவதே இதன் முதன்மையான நோக்கம்.
கூடுதல் தகவலுக்கு @betainfota
Last updated 9 months, 3 weeks ago
ensemble stars!! music
! ВСЕ АРТЫ БЕРУТСЯ С TUMBLR !
если автор не указан пишите в лс , комментарии почти не проверяются
владелец : @Kam1sh1r0
вп 50+ , приход не делаю
Last updated 1 year, 8 months ago
பாவெல் துரோவ் பிரெஞ்சு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்
உள்ளூர் தொலைக்காட்சி TF1 ஒளிபரப்பின்படி, பாவெல் துரோவ் பாரிஸின் போர்கெட் விமான நிலையத்தில் கைதானார்.
துரோவ் பிரெஞ்சு பாதுகாப்புப் படைகளுடன் ஒத்துழைக்காததால், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற கடுமையான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தல் போன்றவை இதில் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
UPD 23:20 UTC
TF1 இன் அறிக்கை BFM மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
TF1 இன் அறிக்கையின்படி, பாவெல் துரோவ் அஜர்பைஜானில் இருந்து பாரிஸ் வந்தடைந்தார் மற்றும் தோராயமாக 18:00 UTC இல் கைது செய்யப்பட்டார்.
டெலிகிராமில் போதுமான எண்ணிக்கையிலான மதிப்பீட்டாளர்கள் இல்லாததே அதில் சட்டவிரோத செயல்பாடு அதிகரிக்க காரணம் என்று செய்தியாளர்கள் கருதுகிறார்கள்.
ராய்ட்டர்ஸின் கருத்துக்கான கோரிக்கைகளுக்கு டெலிகிராம் பதிலளிக்கவில்லை, மேலும் பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
@tginfo குழு வரவிருக்கும் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
#கைது
டெலிகிராமின் பாவெல் துரோவ் வெளியிட்ட அறிக்கை:
? அடுத்த மாதம், டெலிகிராமில் பதிதட உரிமையாளர்கள் தங்கள் பதிவுகள் மூலம் நிதி வெகுமதிகளைப் பெறுவார்கள்.
டெலிகிராமில் ஒளிபரப்பப்படும் பதிதடங்கள் மாதந்தோறும் நூறாயிரம் கோடி பார்வைகளுக்கு உள்ளாகிறது. தற்போது, இந்தப் பார்வைகளில் 10% மட்டுமே டெலிகிராம் விளம்பரங்கள் மூலம் பணமாக்கப்படுகின்றன - இது தனிமறைவை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட விளம்பரக் கருவியாகும்.
மார்ச் மாதத்தில், டெலிகிராம் விளம்பர தளம் கிட்டத்தட்ட நூறு புதிய நாடுகளில் உள்ள அனைத்து விளம்பரதாரர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும். இந்த நாடுகளில் உள்ள பதிதட உரிமையாளர்கள் தங்கள் பதிதடங்களில் விளம்பரங்களைக் காண்பிப்பதன் மூலம் டெலிகிராம் பெறும் வருவாயில் 50% பெறத் தொடங்குவார்கள்.
விளம்பரக் கட்டணங்கள் மற்றும் திரும்பப் பெறுதல்கள் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்ய, நாங்கள் தனித்துவமான இடான் தரவுத்தொடரைப் பயன்படுத்துவோம். துணுக்கில் டெலிகிராம் பயனர்பெயர்களுடன் எங்களின் அணுகுமுறையைப் போலவே, நாங்கள் விளம்பரங்களை விற்று வருவாயை இடான் நாணயம் மூலம் பதிதட உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்வோம். இது ஒரு நற்பண்புமிக்க வட்டத்தை உருவாக்கும் மேலும் இதில் பதிவிடுவோர்கள் தங்கள் இடான் நாணயங்களைப் பணமாக்க முடியும் - அல்லது அவர்களின் பதிதடங்களை மேம்படுத்துவதற்கும் அவற்றை மீண்டும் முதலீடு செய்யலாம்.?
சுயக்குறிப்பின் தனிமறைவு அமைவுகள்
டெலிகிராமின் மொழிபெயர்ப்புத் தளத்தில் சுயக்குறிப்பின் தனிமறைவு அமைவுகளுக்கான உரை தோன்றியுள்ளது. உமது சுயக்குறிப்பை யார் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய இப்புதிய அமைவு உங்களை அனுமதிக்கும்:
"எனது சுயக்குறிப்பை அறிபவர்:"
இந்த அம்சம் அடுத்த மேம்படுத்தலில் வெளிவரும்.
டெலிகிராம் காப்பகத்தின் நடத்தையை மாற்றுகிறது
டெலிகிராமின் கூற்றுப்படி, காப்பகத்தின் நடத்தையில் பாதிப்பை ஏற்படுத்திய இப்பிழை சரி செய்யப்பட்டது: இப்போது காப்பகப்படுத்தப்பட்ட அரட்டையில் அறிவிப்பு ஏற்பட்டால், அது தனிப்பயன் கோப்புறைகளில் ஒன்றில் வெளிப்படையாகச் சேர்க்கப்பட்டால், அது காப்பகத்தை விட்டு வெளியேறாது.
தானியங்கு வடிப்பானில் அரட்டை வகையின்படி அரட்டை ஒரு கோப்புறையில் சேர்க்கப்பட்டால், அது காப்பகத்திலிருந்து தொடர்ந்து வெளியேறும்.
டெலிகிராமின் பரிந்துரைகளின் தளத்தில், இந்த நடத்தை எதிர்காலத்தில் மீண்டும் மாறக்கூடும் என்று மதிப்பீட்டாளர் எச்சரிக்கிறார்.
டெலிகிராம் புள்ளிவிவரச் செயலிழப்புபுள்ளிவிவரங்கள் வரவில்லை என்று குழு மற்றும் பதிதட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். வழக்கமான வரைபடங்கள் மற்றும் தரவுகளுக்குப் பதிலாக, செயலியின் "புள்ளிவிவரங்களை ஏற்றுகிறது" என்ற தகவலைக் காட்டுகிறது, ஆனால் நீண்ட காத்திருப்புக்குப் பிறகும் புள்ளிவிவரத் தரவு தோன்றவில்லை. இப்பிரச்சனை பரவலாய் இருப்பதாகத் தெரிகிறது.
டெலிகிராம் விளம்பரத் தனிப்பயனாக்கத்திற்கான அணுகுமுறையை மாற்றுகிறது
டெலிகிராம் அதன் விளம்பர தளத்தைப் புதுப்பித்துள்ளது. இப்போது, பயனரின் விருப்பங்கள் மற்றும் அருகிலுள்ள நகரத்தின் இருப்பிடம் போன்ற பயனரின் தனிப்பட்டத் தரவுகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்டலாம்.
துரோவின் நிரல்படி, ஒரு பயனர் குழுசேர்ந்த பதிதடங்களின் பட்டியலின் அடிப்படையில் ஆர்வங்கள் பகுப்பாய்வு செய்யப்படும். பயனரின் இணையநெறி முகவரி மூலம் டெலிகிராம் தீர்மானிக்கும் இருப்பிடத் தரவின் அடிப்படையில் பார்வையாளர்களை விளம்பரதாரர்கள் கட்டுப்படுத்த முடியும்.
டெலிகிராமிற்கு வெளியே சேகரிக்கப்பட்டப் பயனர் தரவுத்தளத்தின் அடிப்படையில் விளம்பரதாரர்கள் பயனர்களுக்கு விளம்பரங்களைக் குறிவைக்க அனுமதிக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு வணிகர் டெலிகிராம் அதன் தாறுமாறானத் தொலைபேசி எண் தரவுத்தளத்துடன் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சிறப்புச் சலுகையைக் காட்ட முடியும்.
முன்னதாக, விளம்பரதாரர்கள் பொதுத் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே விளம்பரப் பார்வையாளர்களைத் தனிப்பயனாக்க முடியும், உதாரணமாக, நிதி சார்ந்த பதிதடங்களில் மட்டுமே விளம்பரத்தைக் காண்பிக்கும்.
புதிய மாற்றங்கள் மிகவும் தொடர்புடைய விளம்பரங்களை அடிக்கடி காண்பிக்க அனுமதிக்கின்றன, அதாவது டெலிகிராமின் நிரல்நெறிமுறைகள் நீங்கள் நிதியில் ஆர்வமாக இருப்பதாக நினைத்தால், மற்ற தொடர்பற்றப் பதிதடங்களில் நிதி தொடர்பான விளம்பரங்களைப் பார்க்கத் தொடங்குவீர்கள்.
இதே அணுகுமுறையை கூகுள் போன்ற பிற நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. விளம்பரதாரர்கள் பயனரைப் பற்றிய மூலத் தகவலைப் பெறவில்லை என்றாலும், தனிப்பட்டத் தரவு இப்போது தனிப்பயனாக்கத்தில் ஈடுபட்டுள்ளது.
நீங்கள் விளம்பர இணைப்பைச் சொடுக்கினால் மட்டுமே, ஒரு பயனர் குழுவுடனான உங்கள் தொடர்பை விளம்பரதாரர்கள் மறைமுகமாகத் தீர்மானிக்க முடியும். நீங்கள் விளம்பரத்தைப் புறக்கணித்தால், தரவு எதுவும் மாற்றப்படாது.
துரோவின் நிரல்படி, இது இணைப்பு அணுகல் அமைப்புகளை ஆதாயத்திற்குத் தவறாகப் பயன்படுத்தி டெலிகிராமின் பெரிய தனியார் பதிதடங்களில் விளம்பரங்களைக் காட்டவும் திட்டமிட்டுள்ளது.
பாவெல் துரோவ் வரவிருக்கும் கதைத்தலை அறிவித்தார்
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஜூலை தொடக்கத்தில் டெலிகிராமில் கிடைக்கும்.
அம்சங்கள்:
• தனிமறைவு
தங்களின் ஒவ்வொரு கதையையும் யார் பார்ப்பார்கள் என்பதைப் பயனர்கள் தீர்மானிக்க முடியும்.
• சிறிய இடைமுகம்
அரட்டைப் பட்டியலின் மேலே விரிவாக்கக்கூடிய பிரிவில் கதைகள் வைக்கப்படும்.
• நெகிழ்வுத்தன்மை
கதைகளை எளிதில் மறைக்க முடியும்.
• குறிப்புகள்
பயனர்கள் படங்களையும் காணொளிகளையும் திருத்த முடியும், அத்துடன் குறிப்புகளைச் சேர்க்கலாம் மற்றும் பிறரைக் குறியிடலாம்.
• இரட்டைப் படக்கருவி
முன் மற்றும் பின்புற படக்கருவிகளுடன் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டக் கதைகளைப் பதிவிட பயனர்களால் முடியும்.
• நெகிழ்வு காலாவதி விருப்பங்கள்
கதையின் வாழ்நாளைத் தெரிவுசெய்யவும் பயனர்களால் முடியும்.
சுயவிவரப் பக்கத்தில் அவர்களின் கதைகளைச் சேமிக்கும் திறன் டெலிகிராம் சுயவிவரங்களை மேலும் தகவல் மற்றும் வண்ணமயமானதாக மாற்றும். பயனர்கள் தங்கள் நெருங்கிய தொடர்புகளிலிருந்து அதிகமான உள்ளடக்கத்தைப் பார்ப்பது மட்டுமல்லாமல், பொது அரட்டைகளில் அவர்கள் தொடர்பு கொள்ளும் பயனர்களைப் பற்றி மேலும் அறியலாம்.
⭕️ Main Channel : @TamilLinksOfficial ⭕️
Last updated 7 months ago
டெலிகிராம் சார்ந்த தகவல்களை அனைவருக்கும் தமிழில் வழங்குவதே இதன் முதன்மையான நோக்கம்.
கூடுதல் தகவலுக்கு @betainfota
Last updated 9 months, 3 weeks ago
ensemble stars!! music
! ВСЕ АРТЫ БЕРУТСЯ С TUMBLR !
если автор не указан пишите в лс , комментарии почти не проверяются
владелец : @Kam1sh1r0
вп 50+ , приход не делаю
Last updated 1 year, 8 months ago